கோபியில் ஒளியிழந்த ஒளி பிரதிபலிப்பான்
கோபியில் ஒளியிழந்த ஒளி பிரதிபலிப்பான்
கோபியில் ஒளியிழந்த ஒளி பிரதிபலிப்பான்
ADDED : ஜூலை 27, 2011 01:14 AM
கோபிசெட்டிபாளையம்: நெடுஞ்சாலையில் விபத்து பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒளி பிரதிபலிக்கும் குச்சிகள் துருப்பிடித்துள்ளன.
நெடுஞ்சாலைகளில், அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தை வாகன ஓட்டிகள் அறியும் வகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், ஒளி பிரதிபலிக்கும் குச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. கோபியில் இருந்து கர்நாடகா, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா செல்வது குறைந்த தூரம் என்பதால், கோபி வழித்தடத்தை பயன்படுத்தம் வாகனங்கள் அதிகம். ஈரோடு - சத்தி சாலை, கோபி - கோவை, கோபி - திருப்பூர், கோபி - அந்தியூர் உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில், அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில், ஒளி பிரதிபலிக்கும் குச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு பக்கம் மஞ்சள் கலர், மறு பக்கம் சிவப்பு கலரில் இருக்கம். இரவு நேரத்தில் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் இவை பிரதிபலிக்கும். வாகன ஓட்டிகள் விபத்து பகுதியை கண்டு உஷாரடைவர். சென்ற இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட, இந்த குச்சிகள் துருப்பிடித்தும், பிரதிபலிப்பான்கள் மங்கியும் உள்ளன. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் வேகமாக வரும்போது, டெலினேட்டர் போர்டுகள் சரியாக தெரிவதில்லை. மீண்டும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. துருப்பிடித்துள்ள குச்சிகளை அகற்றி, புதிய குச்சிகள் வைக்க வேண்டும்.