புதிய மின்திட்டங்களை விரைவுபடுத்த சிறப்பு கமிட்டி : தமிழக மின்வாரியம் நடவடிக்கை
புதிய மின்திட்டங்களை விரைவுபடுத்த சிறப்பு கமிட்டி : தமிழக மின்வாரியம் நடவடிக்கை
புதிய மின்திட்டங்களை விரைவுபடுத்த சிறப்பு கமிட்டி : தமிழக மின்வாரியம் நடவடிக்கை
ADDED : ஜூலை 27, 2011 01:14 AM

சென்னை : தமிழக புதிய மின்திட்டங்களை விரைந்து முடிக்கவும், மின்வெட்டு பிரச்னைகளை சமாளிக்கவும், மின்வாரியத்தில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்க, பல வித முயற்சிகளை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே உள்ள திட்டங்களில், கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யவும், புதிதாக துவங்கப்பட்டுள்ள மின்திட்டங்களை துரிதப்படுத்தி முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, தமிழக மின்வாரிய சேர்மன் ஹன்ஸ்ராஜ் வர்மா மேற்பார்வையில், மூத்த பொறியாளர் சசிகுமார் தலைமையில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மின்வாரிய உற்பத்தித் துறை இயக்குனர் பாலசுப்ரமணியன், பகிர்மான இயக்குனர் ஜெயசீலன், நிதி இயக்குனர் ராஜகோபால், தமிழக மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குனர் முருகன், தொடரமைப்பு இயக்குனர் அக்ஷய்குமார் மற்றும் தொடரமைப்பு நிதி இயக்குனர் சேக்கிழார் ஆகியோருடன், திட்டத்துறை தலைமை பொறியாளர், வல்லூர், மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின்நிலைய திட்ட தலைமை பொறியாளர்கள், கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.'சென்னை அருகே, 1,500 மெகாவாட் திறனில், வல்லூரில் அமைக்கப்படும் அனல் மின்நிலையம், மேட்டூரில், 600 மெகாவாட்டில் அமைக்கப்படும் அனல்மின் நிலையம் மற்றும் வடசென்னையில், 1,200 மெகாவாட் திறனில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தின் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க, இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது' என, கமிட்டியின் உயரதிகாரி கூறினார்.
நமது சிறப்பு