/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் 5 மணி நேரம் தாமதம்செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் 5 மணி நேரம் தாமதம்
செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் 5 மணி நேரம் தாமதம்
செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் 5 மணி நேரம் தாமதம்
செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் 5 மணி நேரம் தாமதம்
ADDED : ஆக 06, 2011 02:25 AM
செஞ்சி : செஞ்சியில் மார்க்கெட் கமிட்டியில் நேற்று நெல் கொள்முதல் 5 மணி நேரம் தாமதமாக நடந்தது.செஞ்சியில் தனியார் நெல்மண்டியில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கூலி பிரச்னை ஏற்பட்டது.
இதனால், கடந்த ஜூன் டி.ஆர்.ஓ., முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டது.கூலிப்பிரச்னையை அடுத்து, லாரியில் ஏற்றப்படும் மூட்டையின் எண்ணிக்கை தொடர்பாக வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மீண்டும் பிரச்னை எழுந்தது.இது குறித்து கடந்த 3ம் தேதி தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி தொழிலாளர்கள் நடக்கவில்லை எனக்கூறி வியாபாரிகள் நேற்று நெல் கொள்முதல் செய்வதில்லை என முடிவு செய்தனர். இதனால் நெல் கொண்டு வந்திருந்த 200 விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது.இதையடுத்து தாசில்தார் பரந்தாமன், டி.எஸ்.பி., பன்னீர் செல்வம், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, மார்க்கெட் கமிட்டி ஆய்வாளர் கிருஷ்ணதாஸ், கண்காணிப்பாளர் சிவநேசன் ஆகியோர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தொழிலாளர்கள் அதிகாரிகளுடன் செய்த ஒப்பந்தப்படி பணிகளை செய்ய ஒப்புக்கொண்டனர். இதன் பிறகு வியாபாரிகள் நெல் கொள்முதலில் ஈடுபட்டதால் மதியம் 3.30 மணிக்கு ஏலம் நடந்தது.