Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/நண்பரை கொலை செய்தவாலிபர் மும்பையில் கைது

நண்பரை கொலை செய்தவாலிபர் மும்பையில் கைது

நண்பரை கொலை செய்தவாலிபர் மும்பையில் கைது

நண்பரை கொலை செய்தவாலிபர் மும்பையில் கைது

ADDED : ஆக 25, 2011 02:08 AM


Google News
சேலம்: சேலம், களரம்பட்டி சலூன் கடையில், வாலிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்தவரை, போலீஸார் கைது செய்துள்ளனர்.சேலம், ஆட்டையாம்பட்டி, எஸ்.காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ராஜா(20). களரம்பட்டி மெயின் ரோட்டில், சலூன் கடை நடத்தி வந்த அவர், ஜூலை 27ம் தேதி இரவு, கடையில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து அவரது அக்காள் கணவன் வெங்கட் கிச்சிப்பாளையம் போலீஸாஸில் புகார் தெரிவித்தார்.

இந்த கொலை குறித்து விசாரணை நடத்த, கமிஷனர் சொக்கலிங்கம் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். சட்டம்- ஒழுங்கு துணை கமிஷனர் சத்யபிரியா தலைமையில், உதவி கமிஷனர் காமராஜ், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மனோகரன், எஸ்.ஐ.,ஜெய்சல்குமார், ராஜேந்திரன், ஏட்டுக்கள் பூபதி, குமார், பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ராஜாவின் நண்பரான, கிச்சிப்பாளையம் காந்திநகர் ஹவுசிங் போர்டை சேர்ந்த கணேசன்(22), கொலை செய்தது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த கணேசனை, தனிப்படை போலீஸார் மும்பையில் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜாவிடம் இருந்த, 33 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல் ஃபோனை கொள்ளை அடிப்பதற்காக, சலூன் கடையில் பயன்படுத்தும் கத்தியால், கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, கணேசனிடம் இருந்து, 12 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல் ஃபோனை போலீஸார் பறிமுதல் செய்த போலீஸார், அவரை, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4, ஸ்ரீவித்யா முன் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us