/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போலீசார் தூங்கும் நேரம் குறைவு பொங்கலூர் இன்ஸ்பெக்டர் கவலைபோலீசார் தூங்கும் நேரம் குறைவு பொங்கலூர் இன்ஸ்பெக்டர் கவலை
போலீசார் தூங்கும் நேரம் குறைவு பொங்கலூர் இன்ஸ்பெக்டர் கவலை
போலீசார் தூங்கும் நேரம் குறைவு பொங்கலூர் இன்ஸ்பெக்டர் கவலை
போலீசார் தூங்கும் நேரம் குறைவு பொங்கலூர் இன்ஸ்பெக்டர் கவலை
ADDED : ஜூலை 25, 2011 09:48 PM
பொங்கலூர் : போலீஸ், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், பொங்கலூரில் நடந்தது.
கூட்ட விவாதம்: கண்டியன்கோவில் முன்னாள் ஊராட்சி தலைவர் கோபால்: முன்பெல்லாம் கிராமங்களில் இருந்த பெரியவர்கள் ஊருக்குள் புதிய நபர் வந்தால் விசாரித்து அனுப்புவர். தற்போது அப்படியில்லை; யார் வந்தாலும் விசாரிக்கணும். ரோந்து பணியை போலீசார் அதிகப்படுத்த வேண்டும். அனைத்து ஊர்களிலும் ஊர் கமிட்டி அமைத்து கண்காணிக்க வேண்டும். அ.தி.மு.க., பல்லடம் தொகுதி இணை செயலாளர் லோகநாதன்: திருட்டு நடந்தால் உடனடியாக எப்.ஐ.ஆர்., போடுவதில்லை. பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சண்முகம்: கடந்தாண்டு கொடுவாயில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்தார். ஒரு குடும்பம் அனாதையாகி விட்டது. அதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது. இன்ஸ்பெக்டர் லட்சுமணன்: பொங்கலூர் ஸ்டேஷன் எல்லைக்குள் 108 கிராமங்கள் உள்ளன. போலீசார் பற்றாக்குறையாக இருப்பதால், போலீசார் தூங்கும்நேரம் மிகவும் குறைவு. பொதுமக்கள் தகவல் சொன்னால், சம்பவ இடத்துக்கு அரை மணி நேரத்தில் வந்து விடுகிறோம். போலீசை மட்டும் குறை சொல்லாதீர்கள்.
எந்த நேரத்திலும் உதவ தயாராய் இருக்கிறோம். அடையாளம் தெரியாதவர்களை உபசரிப்பது; நகை பாலீஸ் போட கொடுப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது. சந்தேக நபர்களை பார்த்தால், உடன டியாக தகவல் தெரிவிக்க வேண்டும். எந்த புகார் வந்தாலும் உடனே எப்.ஐ.ஆர்., போடுமாறு எஸ்.பி., அறிவுறுத்தியுள்ளார். தாமதம் செய்வதில்லை. இவ்வாறு, விவாதம் நடந்தது.