/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விபத்து வழக்கில் நஷ்டயீடு வழங்காததால் 2 பஸ் ஜப்திவிபத்து வழக்கில் நஷ்டயீடு வழங்காததால் 2 பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டயீடு வழங்காததால் 2 பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டயீடு வழங்காததால் 2 பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டயீடு வழங்காததால் 2 பஸ் ஜப்தி
ADDED : ஜூலை 14, 2011 01:36 AM
ஈரோடு: விபத்து வழக்கில் நஷ்டயீடு வழங்காததால், கோவை கோட்டத்தை சேர்ந்த இரண்டு அரசு பஸ்கள், நேற்று ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஜப்தி செய்யப்பட்டன.
கோவை மாவட்டம் ரத்னபுரியை சேர்ந்தவர் கனகசபாபதி. 2007 மே 21ல் கோவையில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ்ஸில் வந்தார். விஜயமங்கலம் அருகே சரவணபுரம் என்ற இடத்தில் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால், பயணிகள் பஸ்ஸுக்குள் விழுந்தனர். அதில், கனகசபாபதிக்கு தலையில் பலத்த அடிபட்டது. அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நஷ்டயீடு கேட்டு, ஈரோடு விரைவு நீதிமன்றத்தில் கனகசபாபதி வழக்கு தொடர்ந்தார். 37 ஆயிரத்து 75 ரூபாய் நஷ்டயீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து கழகம் சார்பில் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. சபாபதி சார்பில், உத்தரவு நிறைவேற்று மனு ஈரோடு விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ராஜமாணிக்கம் விசாரித்து, கோவை கோட்ட அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். மற்றொரு வழக்கு: தாராபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். 2006 டிசம்பர் 30ம் தேதி தாராபுரத்தில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ்ஸில் சென்றார். அந்த பஸ், நின்றிருந்த லாரி மீது மோதியதில், அவர் படுகாயம் அடைந்தார். அவரும் நஷ்டஈடு கேட்டு ஈரோடு விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 100 ரூபாய் வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம் சார்பில் நஷ்டஈடு தரவில்லை. தங்கராஜ், ஈரோடு விரைவு நீதிமன்றத்தில் உத்தரவு நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். நீதிபதி ராஜமாணிக்கம் விசாரித்து, அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். இவ்விரு வழக்குகளிலும் தீர்ப்பின் படி, நேற்று ஈரோடு பஸ் ஸ்டாண்டில், இரு அரசு பஸ்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.


