/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாவட்ட கலெக்டர் தகவல் உழவர்சந்தை வளாகத்தில் தேங்காய் பருப்பு ஏலம்மாவட்ட கலெக்டர் தகவல் உழவர்சந்தை வளாகத்தில் தேங்காய் பருப்பு ஏலம்
மாவட்ட கலெக்டர் தகவல் உழவர்சந்தை வளாகத்தில் தேங்காய் பருப்பு ஏலம்
மாவட்ட கலெக்டர் தகவல் உழவர்சந்தை வளாகத்தில் தேங்காய் பருப்பு ஏலம்
மாவட்ட கலெக்டர் தகவல் உழவர்சந்தை வளாகத்தில் தேங்காய் பருப்பு ஏலம்
ADDED : ஜூலை 21, 2011 02:18 AM
நாமக்கல் : 'ப.வேலூர் உழவர்சந்தை வளாகத்தில், ஏல முறையில் தேங்காய் பருப்பு விற்பனை நடக்க உள்ளது' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், 1,600 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து கிடைக்கும் தேங்காய்கள், பல்வேறு கமிஷன் மண்டிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் தேங்காய் பருப்பு விற்பனை செய்ய, ப.வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ப.வேலூர் உழவர் சந்தை வளாகத்தில் விவசாயிகளுக்கான இடவசதி நிழற்கூடம், கான்கிரீட் தளம், சேமிப்பிற்கான இடவசதி உள்ளதால், விவசாயிகள் வேண்டுகோள்படி தேங்காய் பருப்பு ஏல விற்பனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொள்வதால் தேங்காய் பருப்புக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் தேங்காய் பருப்பை நன்கு உலர்த்தி தரம் பிரித்து உழவர்சந்தை வளாகத்தில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


