ADDED : செப் 15, 2011 10:04 PM
தேவதானப்பட்டி : ரங்கநாதபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகள் ரஞ்சிதா 27, இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த சிவானண்டி மகன் சத்தியமூர்த்திக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ரஞ்சிதாவின் நாத்தனார் அன்னகாமு, இவரது கணவர் கோட்டைச்சாமி இருவரும் ரஞ்சிதாவை திட்டியுள்ளனர். மனமுடைந்த ரஞ்சிதா மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டார். க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெரியகுளம் ஆர்.டி.ஓ., அனிதா விசாரித்து வருகிறார்.