ADDED : ஆக 28, 2011 11:16 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் சேர்க்கை துவக்க விழா நடந்தது.
சங்கராபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை கடந்த வாரம் மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.புதிய மேல் நிலைப் பள்ளி துவக்க விழா மற்றும் மாணவர் சேர்க்கை துவக்க விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குசேலன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றார். அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சக்கரவர்த்தி, அரிமா சங்க தலைவர் ராஜா, ரோட்டரி தலைவர் வெங்கடேசன், வள்ளலார் மன்ற துணை தலைவர் வைத்திலிங்கம், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், நாராயணன் வாழ்த்தி பேசினர். மாணவிகள் சேர்க்கையை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அரசு துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் தமிழ்மணி நன்றி கூறினார்.