Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/லாரி கதவை உடைத்து40 மிக்சிகள் திருட்டு

லாரி கதவை உடைத்து40 மிக்சிகள் திருட்டு

லாரி கதவை உடைத்து40 மிக்சிகள் திருட்டு

லாரி கதவை உடைத்து40 மிக்சிகள் திருட்டு

ADDED : செப் 16, 2011 12:34 AM


Google News
திண்டிவனம்:திண்டிவனம் அருகே லாரியின் கதவை உடைத்து 40 மிக்சிகள் திருட்டு போனது.சென்னை பாடியநல்லூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து கடந்த 9ம் தேதி இரவு கன்டெய்னர் லாரியில் 552 மிக்சிகளை திருச்சிக்கு ஏற்றி அனுப்பினர்.

திண்டிவனம் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு இரவு 9 மணிக்கு டிரைவர் ஜித்தெந்தர் சிங்,42 தூங்கி விட்டார். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்த போது, லாரியின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. அதனுள் இருந்த 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 40 மிக்சிகள் திருட்டு போயிருந்தது.புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us