/உள்ளூர் செய்திகள்/சேலம்/சூறைக்காற்றுடன் பலத்த மழை மரங்கள் சாய்ந்ததால் மின்தடைசூறைக்காற்றுடன் பலத்த மழை மரங்கள் சாய்ந்ததால் மின்தடை
சூறைக்காற்றுடன் பலத்த மழை மரங்கள் சாய்ந்ததால் மின்தடை
சூறைக்காற்றுடன் பலத்த மழை மரங்கள் சாய்ந்ததால் மின்தடை
சூறைக்காற்றுடன் பலத்த மழை மரங்கள் சாய்ந்ததால் மின்தடை
ADDED : ஆக 15, 2011 02:30 AM
மேட்டூர்: மேச்சேரியில் நேற்று, சூறைகாற்றுடன் பெய்த பலத்த மழையால், ரோட்டோம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தது.
மின்கம்பிகளும் சேதமடைந்ததால் நேற்று மேச்சேரியில் மின்தடை ஏற்பட்டது. மேச்சேரி போலீஸ் ஸ்டேஷன் அருகே, மேச்சேரி-தர்மபுரி ரோட்டோரம் 50 ஆண்டுக்கு மேல் பழமையான அரசமரம், புளியமரம் உள்ளது. மரங்கள் அருகில் மின்கம்பங்களும் உள்ளது. நேற்று மாலை 4 மணி அளவில், மேச்சேரியில் சூறைகாற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக அரசமரம், புளியமரம் இரண்டும் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. மின்கம்பிகள் மேல் மரம் விழுந்ததால், மின்கம்பங்கள் சாய்ந்து மேச்சேரி முழுவதும் நேற்று மாலை மின்தடை ஏற்பட்டது. இரு மரங்களும் ரோட்டின் குறுக்கே விழுந்ததால் மேச்சேரி- தர்மபுரி ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த வருவாய்துறையினர், போலீஸார், டவுன்பஞ்., ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இரு மரங்கள் வேரோடு சாய்ந்ததால், மேச்சேரி-தர்மபுரி ரோட்டில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.