ஏலக்காய் கடத்தல் டிரைவருக்கு அபராதம்
ஏலக்காய் கடத்தல் டிரைவருக்கு அபராதம்
ஏலக்காய் கடத்தல் டிரைவருக்கு அபராதம்
ADDED : செப் 15, 2011 10:04 PM
கூடலூர் : கேரளாவில் உள்ள ஏலக்காயை வணிகவரித்துறைக்கு வரி செலுத்தாமல், தமிழகப்பகுதிக்கு கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது.
நேற்று லோயர்கேம்ப் போலீசார் செக்போஸ்டில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, குமுளியில் இருந்து கூடலூர் நோக்கி வேகமாக வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த 780 கிலோ ஏலக்காயை பறிமுதல் செய்து, வணிகவரித்துறையிடம் ஒப்படைத்தனர். ஏலக்காய் கடத்தியதாக குமுளியைச் சேர்ந்த டிரைவர் சபீன்மஜீத்திற்கு 58 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.