Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/சோனியா காந்தி உடல் நலம் பெற நாகராஜாகோயிலில் பாலாபிஷேகம் : குமரி காங்கிரசார் வழிபாடு

சோனியா காந்தி உடல் நலம் பெற நாகராஜாகோயிலில் பாலாபிஷேகம் : குமரி காங்கிரசார் வழிபாடு

சோனியா காந்தி உடல் நலம் பெற நாகராஜாகோயிலில் பாலாபிஷேகம் : குமரி காங்கிரசார் வழிபாடு

சோனியா காந்தி உடல் நலம் பெற நாகராஜாகோயிலில் பாலாபிஷேகம் : குமரி காங்கிரசார் வழிபாடு

ADDED : ஆக 09, 2011 02:15 AM


Google News

நாகர்கோவில் : அகில இந்திய காங்., தலைவர் சோனியா காந்தி உடல் நலம் பெற வேண்டி குமரி காங்கிரசார் நாகராஜாகோயிலில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.அகில இந்திய காங்., தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் விரைவில் உடல் நலம் பெற்று நாடு திரும்ப வேண்டி அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் பொன் ராபர்ட்சிங் அறிவுறுத்தலின்படி குமரி மாவட்ட காங்கிரசார் மும்மத வழிபாட்டுத்தலங்களில் பிரார்த்தனை நடத்துகின்றனர். இதன்படி நேற்று நாகர்கோவில் நாகராஜாகோயிலில் பாலாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் லிங்கம், துணை தலைவர்கள் ராஜா, பாண்டயன், பொன்னையா, குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us