Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கோர்ட்டுக்கு சென்றுதான் விலக்கு பெற முடியும் சலவை ஆலைகளுக்கு வாரியம் "அட்வைஸ்'

கோர்ட்டுக்கு சென்றுதான் விலக்கு பெற முடியும் சலவை ஆலைகளுக்கு வாரியம் "அட்வைஸ்'

கோர்ட்டுக்கு சென்றுதான் விலக்கு பெற முடியும் சலவை ஆலைகளுக்கு வாரியம் "அட்வைஸ்'

கோர்ட்டுக்கு சென்றுதான் விலக்கு பெற முடியும் சலவை ஆலைகளுக்கு வாரியம் "அட்வைஸ்'

ADDED : ஆக 14, 2011 03:08 AM


Google News
திருப்பூர் : திருப்பூர் நீங்கலான பகுதிகளில் உள்ள சலவை ஆலைகளுக்கு 'ஜீரோ டிஸ்சார்ஜ்' கட்டாயமில்லை; திருப்பூர் சலவையாளர்கள் கோர்ட்டில் மனு செய்தால் மட்டுமே விலக்கு பெறமுடியும் என, மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தெரிவித்துள்ளார்.'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை சரிவர பின்பற்றாத சாய ஆலைகளுடன், சலவை ஆலைகளும் மூடப்பட்டுள் ளன. மொத்தம் உள்ள 165 சலவை ஆலைகளில், 90 சலவை ஆலைகள் பொது சுத்திகரிப்பு நிலையங்களில் உறுப்பினராக உள்ளன. ஒன்பது சலவை ஆலைகள் இணைந்து, தனியாக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளன. மேலும், 66 ஆலைகள் தனியாக சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவியுள்ளன.'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களால், சாய சலவை ஆலைகள் அனைத்தும் கடந்த பிப்., 2ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் உள்நாட்டு மற் றும் ஏற்றுமதிக்கான பனியன் உற்பத்தி மிகவும் பின்தங்கிவிட்டது. இந்நிலை யில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களையும், உப்பையும் பயன்படுத்தாத சலவை ஆலைகளை, வழக்கில் இருந்து விடுவிப்பதோடு, சுத்திகரிப்பு கட்டுப்பாடுகளில் இருந்தும் விலக்களிக்க வேண்டும் என, சலவை ஆலை உரிமை யாளர்கள் கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணன் கூறியதாவது:திருப்பூரை தவிர மற்ற பகுதிகளில் இயங்கும் சலவை ஆலைகளுக்கு 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை கட்டாயப்படுத்தவில்லை. திருப்பூரில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்னைக்கு பிறகு, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' கட்டாயமாக்கப்பட்ட போது, சலவை ஆலைகளும் உட்படுத்தப்பட்டன. சாய ஆலைகளின் ஒவ்வொரு வழக்கிலும், சலவை ஆலைகளும் உடனிருந்ததால், சென்னை ஐகோர்ட்டில் அவ்வாறு உத்தரவிட்டிருந்தது. சாயத் தொழில் சிவப்பு வகைப்பாட்டிலும், சலவை தொழில் ஆரஞ்சு வகைப்பாட்டிலும் உள்ளன.

இருப்பினும் சலவை ஆலைகளும் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது; கோர்ட்டில் மனு செய்துதான், மீண்டும் விலக்கு பெற வேண்டும். கோர்ட் தரப்பில் கேட்கும் போது, சாயம் மற்றும் சலவை தொழில் களில் உள்ள வேறுபாடுகள் குறித்தும், ரசாயன பயன்பாடுகள் குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிக்கை அளிக் கும். அதற்குபிறகு, கோர்ட் விசாரணை மூலமாக இறுதி தீர்ப்பு வெளியாகும்.சலவை ஆலை உரிமையாளர்கள் கோர்ட்டில் தற்போது மனு செய்துள்ள னர்; விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகுதான், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us