/உள்ளூர் செய்திகள்/கரூர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வர தாமதம் :கரூர் நகராட்சி அலுவலகம் "வெறிச்'உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வர தாமதம் :கரூர் நகராட்சி அலுவலகம் "வெறிச்'
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வர தாமதம் :கரூர் நகராட்சி அலுவலகம் "வெறிச்'
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வர தாமதம் :கரூர் நகராட்சி அலுவலகம் "வெறிச்'
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வர தாமதம் :கரூர் நகராட்சி அலுவலகம் "வெறிச்'
ADDED : செப் 23, 2011 01:20 AM
கரூர்: கரூர் நகராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரிடம் வேட்புமனு வாங்க நியமிக்கப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குறிப்பிட்ட நேரத்தில் வராததால், அலுவலகம் வெறிச்சோடியிருந்தது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 17 ம் தேதி மற்றும் 19 ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. விரிவாக்கம் செய்யப்பட்ட கரூரில் நகராட்சியில் புதியதாக இடம் பெற்றுள்ள 48 வார்டு நான்காக பிரிக்கப்பட்டு போட்டியிடுவோரிடம் வேட்புமனு வாங்க உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வசதியாக கரூர் நகராட்சி அலுவலகத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 1 வது வார்டு முதல் 10 வது வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர் நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணனிடம் மனுத்தாக்கல் செய்யலாம். நகராட்சி 11 முதல் 20 வது வார்டுகளில் போட்டியிடுவோர் நகராட்சி பொறியாளர் பாக்கிய லட்சுமியிடமும், 21 முதல் 30 வது வார்டுகளில் போட்டியிடுவோர் மேலாளர் மணியம்மாளிடமும், 31 முதல் 40 வார்டுகளில் போட்டியிடுவோர் வருவாய் அலுவலர் குணசேகரனிடமும், 41 வது வார்டு முதல் 48 வது வார்டுகளில் போட்டியிடுவோர் உதவி பொறியாளர் வேலுசாமியிடமும மனு தாக்கல் செய்யலாம். கரூர் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தொழிலாளர் நல துணை ஆய்வாளர் மைவிழி செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவுபடி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து வேட்புமனுக்களை பெறவேண்டும். ஆனால், கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளவர்களிடம் வேட்புமனு வாங்க நியமிக்கப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மைவிழி செல்வி, நேற்று காலை 11.45 மணி வரை நகராட்சி அலுவலகத்துக்கு வரவில்லை. இதனால் கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் வேட்புமனு அளிக்க உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மைவிழி செல்விக்கு ஒதுக்கப்பட்ட அறை வெறிச்சோடியிருந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மைவிழிசெல்வி, குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகம் வராதது குறித்து, கரூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளிடம் கேட்ட போது, இதோ வந்து விடுவார், வந்து விடுவார்' என பதிலளித்தனர். ஆனால், நேற்று மதியம் 12 மணி வரை கரூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மைவிழிசெல்வி அலுவலகத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.