Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/வலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி திருவாரூரில் வாலிபர் கைது

வலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி திருவாரூரில் வாலிபர் கைது

வலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி திருவாரூரில் வாலிபர் கைது

வலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி திருவாரூரில் வாலிபர் கைது

ADDED : ஆக 26, 2011 01:21 AM


Google News
திருவாரூர்: வேலை வாங்கித் தருவதாக 10 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த வாலிபரை திருவாரூர் அருகே போலீஸார் கைது செய்தனர்.திருவாரூர் அருகே முடிகொண்டான் நடராஜன் மகன் ராஜசேகரன் (33).

மதுரை திருமங்கலம் மம்தாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பரமகுடியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மாரியப்பனின் மகன் தினேஷ்பாபு பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவருக்கு மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கடந்த ஃபிப்ரவரி மாதம் 10 லட்சம் ரூபாயை ராஜசேகரன் பெற்றார். பின்னர் மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையில் வேலைக்கான உத்தரவை, மாரியப்பனிடம் ராஜசேகரன் கொடுத்துள்ளார். அது போலியான உத்தரவு என தெரியவந்ததன் பேரில், மாரியப்பன் திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., குணசேகர், இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ராஜசேகரனை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'ராஜசேகரன் 10 லட்சம் பணம் பெற்றது உண்மை' என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நன்னிலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மதியம் ஆஜர் செய்தனர். நீதிபதி அல்லி வழக்கை விசாரித்து ராஜசேகரனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். ராஜசேகரன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us