/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கூடுதுறை கோவில் கடைகளில் பீடி, சிகரெட்கூடுதுறை கோவில் கடைகளில் பீடி, சிகரெட்
கூடுதுறை கோவில் கடைகளில் பீடி, சிகரெட்
கூடுதுறை கோவில் கடைகளில் பீடி, சிகரெட்
கூடுதுறை கோவில் கடைகளில் பீடி, சிகரெட்
ADDED : ஆக 05, 2011 01:59 AM
ஈரோடு: பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளில், பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளில், பீடி, சிகரெட், புகையிலை ஆகியவற்றை விற்பனை செய்ய தடைவிதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் வழக்கமான தடை உத்தரவைப் போலவே, இந்த உத்தரவையும் அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளும் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் 1,500க்கும் மேற்பட்ட கோவில்கள் இயங்கி உள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெரும்பாலான பெட்டிக் கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உள்ள பெரும்பாலான கோவில் கடைகளிலும், போதை வஸ்து பொருட்களை, கடை குத்தகைதாரர்கள் விற்பனை செய்கின்றனர். வழக்கமான கடைகளில் விற்பதை விட, அதி விலைக்கு போதை வஸ்துக்கள் விற்பனை செய்கின்றனர் என்பது கூடுதல் தகவல். பவானி சங்கமேஸ்வரர் கோவில் சன்னதி தெருவில், கோவிலுக்கு சொந்தமான கடைகளிலும், பீடி, சிகரெட் மற்றும் பிற போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. பவானி கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் கூறியதாவது: பவானி கூடுதுறை கோவில் வளாகத்தில், 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் ஒரு சில கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை ஆகியவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கூடுதல் விலை குறித்து கேட்டால், 'கோவில் கடையில் இவற்றை விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு, லஞ்சம் தரவே கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது' என்ற பதில் வருகிறது. பள்ளி, கல்லூரி, கோவில் கடைகளில் பீடி,சிகரெட், புகையிலை ஆகியவற்றை விற்கும் கடைகள் மீதும், உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.