/உள்ளூர் செய்திகள்/சென்னை/மறியல் போராட்டத்தில் பெண் போலீஸ் கால் முறிவுமறியல் போராட்டத்தில் பெண் போலீஸ் கால் முறிவு
மறியல் போராட்டத்தில் பெண் போலீஸ் கால் முறிவு
மறியல் போராட்டத்தில் பெண் போலீஸ் கால் முறிவு
மறியல் போராட்டத்தில் பெண் போலீஸ் கால் முறிவு
ADDED : ஆக 03, 2011 01:20 AM
சென்னை : புரட்சிகர மாணவர் அமைப்பினர் நடத்திய மறியல் போராட்டத்தை தடுத்த, பெண் போலீசிற்கு கால் முறிவு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, எழும்பூர், சந்தோஷ் நகரைச் சேர்ந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள், போலீஸ் அனுமதியின்றி 1ம் தேதி, சமச்சீர் கல்வியை வலியுறுத்தி, தாசப்பிரகாஷ் ஓட்டல் முன், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்கும் போது, போலீசாரை தள்ளியும், தாக்கியும் பலப்பிரயோகம் செய்து, பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். கைது செய்வதாக அறிவித்தும், வண்டியில் ஏற மறுத்து, தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது, பணியில் இருந்த, சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய, பெண் போலீஸ் புஷ்பமேரியை, கூட்டத்தில் இருந்தவர்கள் தள்ளிவிட்டனர். இதில், அவரது கால் முறிந்தது. அவர், பூந்தமல்லியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக, சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, காலில் எட்டு இடங்களில் ஸ்டீல் பிளேட் போட வேண்டும் என, டாக்டர்கள் தெரிவித்தனர். கமிஷனர் திரிபாதி மருத்துவமனைக்கு சென்று, பார்வையிட்டு, விரைவான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.