/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சமச்சீர் கல்வி தீர்ப்பு எதிரொலி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்சமச்சீர் கல்வி தீர்ப்பு எதிரொலி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
சமச்சீர் கல்வி தீர்ப்பு எதிரொலி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
சமச்சீர் கல்வி தீர்ப்பு எதிரொலி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
சமச்சீர் கல்வி தீர்ப்பு எதிரொலி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 19, 2011 12:34 AM
விழுப்புரம் : தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டதால் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டதை வரவேற்று மாவட்டத்தின் பல இடங்களில் தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு நகர செயலாளர் பாலாஜி தலைமையில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகில் வக்கீல் அசோகன், செஞ்சியில் மாவட்ட அவைத்தலைவர் மஸ்தான் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஒன்றிய சேர்மன் வெங்கடாசலம் தலைமையிலும் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.