/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழநி கோயிலில் புது "ரோப் கார்' பொருட்களுக்கு தனி ஏற்பாடுபழநி கோயிலில் புது "ரோப் கார்' பொருட்களுக்கு தனி ஏற்பாடு
பழநி கோயிலில் புது "ரோப் கார்' பொருட்களுக்கு தனி ஏற்பாடு
பழநி கோயிலில் புது "ரோப் கார்' பொருட்களுக்கு தனி ஏற்பாடு
பழநி கோயிலில் புது "ரோப் கார்' பொருட்களுக்கு தனி ஏற்பாடு
ADDED : ஆக 25, 2011 11:18 PM
பழநி : பழநி மலைக்கோயிலின் பொருட்கள் எடுத்து செல்ல பிரத்யேக 'ரோப் கார்' அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு 'வின்ச்' மட்டுமே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், நான்கு கோடி ரூபாய் மதிப்பில் 'ரோப் கார்' அமைக்கப்பட்டது. இதற்கு பக்தர்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால், கூடுதலாக இரண்டாவது 'ரோப் கார்', ஆறரை கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர மலைக்கோயிலுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும், குப்பை அகற்றவும் பிரத்யேக 'ரோப் கார்' அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, மேல்தளத்தில் சிமென்ட் பில்லர்கள், தரை தளத்தில் சிமென்ட் 'பெட்' அமைக்கப்பட்டது. இவற்றில் ராட்சத சக்கரங்கள் பொருத்தப்பட்டு, இரும்பு கயிறு இணைக்கும் பணி துவங்கியுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்பணி, இரு வாரங்களில் முடியும்.விரைவில் இதை இயக்குவோம்,'' என்றார்.