ADDED : ஆக 05, 2011 01:26 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி 'டான்சிக்கு 20 டன் தேக்கு மரங்கள் கேரளாவில்
இருந்து கொண்டு வரப்பட்டது.பொள்ளாச்சி டான்சி நிறுவன அதிகாரிகள்
கூறியதாவது:பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் மர அறுவை மில் அமைக்க
திட்டமிடப்பட்டது.
இதற்காக இரண்டு கோடி ரூபாய் செலவில் கேரள
மாநிலத்திலிருந்து தேக்கு மரங்கள் 'ஆர்டர்' செய்யப்பட்டிருந்தது.
வெளிநாட்டிலிருந்து நவீன மரம் அறுக்கும் இயந்திரங்கள் வாங்க
திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மரங்களுக்கான
தொகை செலுத்தப்பட்டு கேரளா (வாளையாறு) பகுதியில் இருந்து தேக்கு மரங்கள்
கொண்டு வரப்பட்டுள்ளன.தற்போது பொள்ளாச்சி டான்சி நிறுவனத்துக்கு 20 'டன்'
மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 300 'டன்' மரங்கள் கொண்டு வரப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது. மரம் அறுக்கும் இயந்திரங்கள் வந்த பிறகு மர
அறுவை மில்லில் மரம் வெட்டும் பணிகள் துவங்கும், என்றனர்.