ADDED : ஆக 01, 2011 07:10 AM
மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டின், மத்தியப் பகுதியில் உள்ள செபுவில்இருந்து, இலய்லோ நோக்கிச்சென்று கொண்டிருந்த பயணிகள்கப்பல், கடும் புயல், மழை காரணமாக, விபத்தில் சிக்கி, கடலில் மூழ்கத் துவங்கியது.தகவல் அறிந்ததும், சம்பவஇடத்திற்கு விரைந்த பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மற்றும்மீனவர்கள், கப்பலில் இருந்த 168பயணிகளை, உயிருடன் மீட்டனர்.