சிங்கூர் நில வழக்கு: மம்தாவுக்கு ஆதரவாக தீர்ப்பு
சிங்கூர் நில வழக்கு: மம்தாவுக்கு ஆதரவாக தீர்ப்பு
சிங்கூர் நில வழக்கு: மம்தாவுக்கு ஆதரவாக தீர்ப்பு
ADDED : செப் 28, 2011 10:59 AM
கோல்கட்டா: சிங்கூர் நிலம் தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கொண்டு வந்த சட்டமசோதா செல்லும் என கோல்கட்டா ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் சிங்கூரில், கார் தொழிற்சாலை அமைக்க அப்போதைய கம்யூனிஸ்ட் அரசு விவசாயிகளிடமிருந்து நிலங்களை வாங்கி டாடா மோட்டார் நிறுவனத்திடம் அளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், அப்போதைய எதிர்க்கட்சித்தலைவராக இருந்த மம்தாவும் போராடினர். இறுதியில் கார் தொழிற்சாலையை சிங்கூரில் நிறுவப்போவதில்லை என டாடா அறிவித்தது. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மம்தா ஆட்சியமைத்த பின், கடந்த ஜூன் மாதம் சிங்கூர் நில மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி மசோதா ஒன்றை சட்டசபையில் நிறைவேற்றினார். இம்மசோதாவை செல்லாது என அறிவிக்க கோரி, டாடா சார்பில் கோல்கட்டா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதில் சட்ட மசோதா செல்லும் என ஐகோர்ட் அறிவித்துள்ளது. இது மம்தாவுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.