/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அமைச்சர்களின் சிபாரிசின் பேரில் உள்ளூர் சேனல்களுக்கு அனுமதிஅமைச்சர்களின் சிபாரிசின் பேரில் உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி
அமைச்சர்களின் சிபாரிசின் பேரில் உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி
அமைச்சர்களின் சிபாரிசின் பேரில் உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி
அமைச்சர்களின் சிபாரிசின் பேரில் உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி
ADDED : செப் 11, 2011 10:58 PM
திண்டுக்கல் : அரசு கேபிள் 'டிவி' யில் உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்ப, அந்தந்த மாவட்ட அமைச்சர்களின் சிபாரிசின் பேரில் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு கேபிள் 'டிவி' காப்பரேஷன் மூலம் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கேபிள் இணைப்பு வழங்கும் திட்டம் செப்., 2 முதல் செயல்படுத்தப்பட்டது. முன்னதாக தனியார் எம்.எஸ்.ஓ., க்கள் மூலம் ஒளிபரப்பப்பட்ட உள்ளூர் சேனல்களில் முதலில் செய்தி ஒளிபரப்பையும்,பின், உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பையும் அரசு தடை செய்தது. அரசு கேபிள் துவங்கப்பட்ட பின், முறைப்படுத்தப்பட்டு உள்ளூர் சேனல்களுக்கு அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும், என அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் அறிவித்தது. இந்நிலையில், திடீரென எந்த அளவுகோலும் இல்லாமல், உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பை துவக்கியுள்ளன. விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி தராமல், அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரின் சிபாரிசு அடிப்படையில் உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், பலர் அனுமதி பெற அமைச்சர்களை நாடி வருகின்றனர். மற்ற தகுதிகள் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை. உள்ளூர் சேனல்களில் தற்போதைக்கு செய்திகள் ஒளிபரப்ப கூடாது, என்ற ஒரே நிபந்தனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.