ADDED : செப் 25, 2011 12:46 AM
செய்துங்கநல்லூர்:கருங்குளம் யூனியனில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு வேகமாகவிற்பனையாகிறது.செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள கருங்குளம் யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு மனுதாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புதிய கவுன்சிலர் ஹாலில் மாவட்ட பஞ்., உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம், பழைய கவுன்சில் ஹாலில் யூனியன் கவுன்சிலர்கள், பஞ்.,தலைவர்கள் பதவிக்கு மனுத்தாக்கல் செய்யலாம். அதற்காக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வேட்பு மனுக்களை கொடுத்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக இவ்யூனியனில் மனுக்கள் விற்பனையாகின்றது. இதனால் வாக்காளர் பட்டியல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. போட்டோவுடன் வாக்காளர் பட்டியலை அதிகாரிகள் எதிர்பார்த்து உள்ளனர். இன்னும் அரசு அதை வழங்கவில்லை. எனவே போட்டோ இல்லாத வாக்காளர் பட்டியலை தேவை க்கு தகுந்தாற்போல் எடுத்து கொடுத்து வருகின்றனர்.யூனியன் கவுன்சிலர் பதவியை விட பஞ்.,தலைவர் பதவிக்கு தான் விண்ணப்பங்கள் அதிகமாக விற்பனையாகின்றது என்று தேர்தல் அலுவலர்கள் பேசிக் கொள்கின்றனர். இதுவரை எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. நாளை (திங்கட்கிழமை) முதல் மனுத்தாக்கல் நடக்கலாம் என பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர்.