ADDED : செப் 17, 2011 02:14 AM
ஈரோடு: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தாஜ்நகரை சேர்ந்த ஜெயரான்
மகன் மனோஜ்குமார்(19).
பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ்
2 படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும், மனோஜ்குமார்
தனது சைக்கிளை எடுத்தார். அதே பள்ளியில் படிக்கும் சிவசங்கரின் சைக்கிளுடன்
மோதியது. இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு, மோதலாக மாறியது. நேற்று காலை
மீண்டும் இருவரும் மோதிக் கொண்டனர். சைக்கிள் செயினால் மனோஜ்குமார்
தாக்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பள்ளிபாளையம்
போலீஸார் விசாரிக்கின்றனர்.