/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/2 வாரத்தில் விரைவு பட்டா மாறுதல் சான்று2 வாரத்தில் விரைவு பட்டா மாறுதல் சான்று
2 வாரத்தில் விரைவு பட்டா மாறுதல் சான்று
2 வாரத்தில் விரைவு பட்டா மாறுதல் சான்று
2 வாரத்தில் விரைவு பட்டா மாறுதல் சான்று
ADDED : ஆக 29, 2011 01:01 AM
தாராபுரம்: ''தாராபுரம் தாலுகாவில் இரு வாரங்களில் விரைவு பட்டா மாறுதல்
சான்றிதழ்கள் வழங்கப்படுமென,'' கலெக்டர் மாதிவாணன் தெரிவித்தார்.
தாராபுரம்
தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் கலெக்டர் மதிவாணன்
கூறியதாவது: தமிழகத்தில் நில உடைமைதாரர்கள் வாய்மொழியாக தங்கள்
வாரிசுதாரர்களுக்கு இடங்களை பிரித்து கொடுத்துள்ளனர். இதை முறைபடுத்த
வாரிசுதாரர்களிடையே பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு, விரும்பத்தகாத செயல்கள்
நடக்கிறது. பட்டா பெருவதில் பொது மக்கள் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும்,
குழப்பங்கள் நிரைந்ததாக பல்வேறு புகார்கள் வந்தன. தமிழக முதல்வர் சிறப்பு
மற்றும் விரைவு பட்டா மாறுதல் சான்றிதழ்கள் வழங்க சில ஆலோசனைகள் வழங்கி
உத்தரவிட்டுள்ளார். விரைவு பட்டா மாறுதல் பெற சிட்டா அடங்கல் மற்றும்
விபரங்கள் அடங்கிய நகல்களை வி.ஏ.ஓ.,விடம் மனுவாக கொடுக்கவேண்டும். மனு
பெற்றுக்கொண்டதற்காக ஒப்புகை சீட்டு வி.ஏ.ஓ., கையொப்பம் செய்து வழங்குவார்.
மனு மீது பல்வேறு விசாரணைக்கு பின் தாலுகா அலுவலகத்தில் 2 வாரத்துக்குள்
விரைவு பட்டா மாறுதல் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம். மாணவ, மாணவிகளின்
நலன் கருதி உயர் கல்வியில் சேர ஜாதி, இருப்பிடம், வருமானம் ஆகிய
சான்றிதழ்கள் பெற இறுதி நாட்களில் அலையும் நிலை உள்ளது. இவர்களின் அலைச்சலை
கருதில் கொண்டு தமிழக முதல்வர் பிளஸ் 2 படிக்கும் போதே அவர்களுக்குறிய
ஜாதி, இருப்பிடம், வருமானம் ஆகிய சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதை செயல்படுத்தும் விதமாக டிசம்பர் 30ம் தேதிக்குள் பள்ளிகளில் தலைமை
ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் ஆகியோரிடத்தில் ஜாதி, வருமானம், இருப்பிடம்
ஆகியவற்றின் விண்ணப்பங்களை பெற்று ஆய்வு செய்து தாலுகா அலுவலகத்தில்
ஒப்படைக்க வேண்டும். வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரின்
பார்வைக்கு பின் சான்றிதழ்களில் கையொப்பமிட்டு அந்தந்த பள்ளிகளிலேயே
பெற்றுக்கொள்ளலாம். தமிழக அரசு வழங்கும் இலவச கிரைண்டர், மிக்ஸி, ஃபேன்
ஆகியவை ரேஷனில் அரிசி பெறும் ரேஷன்கார்டுகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு
அவர் கூறினார்.