அக்ரி' மாணவர்கள் 45 ஆண்டுக்கு பின் சந்திப்பு
அக்ரி' மாணவர்கள் 45 ஆண்டுக்கு பின் சந்திப்பு
அக்ரி' மாணவர்கள் 45 ஆண்டுக்கு பின் சந்திப்பு
ADDED : ஆக 20, 2011 04:23 PM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில், 45 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள், குடும்பத்துடன் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், 1962 - 66ம் ஆண்டில், வேளாண் இளம் அறிவியல் கல்வி பயின்ற மாணவர்கள், 45 ஆண்டுகளுக்கு பின் சந்திக்க விரும்பினர். அண்ணாமலைப் பல்கலையில் துறைத் தலைவர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற கோவிந்தசாமி, நாச்சியப்பன் ஆகியோர் ஏற்பாட்டின்படி, 36 பேர் குடும்பத்துடன் சந்தித்துக் கொண்டனர்.
அரசு மற்றும் பல்வேறு துறைகளில், உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர்கள் அனைவரும், குடும்பத்தாரை அறிமுகப்படுத்தி, தாங்கள் தங்கியிருந்த விடுதி, படித்த வகுப்பறை ஆகியவற்றை பார்த்து மகிழ்ந்தனர்.