Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நரிவால் "ஆர்கிட்' மலர்கள்

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நரிவால் "ஆர்கிட்' மலர்கள்

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நரிவால் "ஆர்கிட்' மலர்கள்

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நரிவால் "ஆர்கிட்' மலர்கள்

ADDED : ஆக 03, 2011 10:43 PM


Google News
கூடலூர் : கூடலூரில் பூத்துள்ள நரிவால் என்ற 'ஆர்கிட்' மலர், அனைவரையும் கவர்ந்து வருகிறது.

மரங்களில் ஒட்டுண்ணியாக வாழும் ஆர்கிட் செடிகளில் பூக்கும் மலர்கள், ஒரு வாரம் முதல் இரண்டு மாதம் வரை வாடாமல் இருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட ஆர்கிட் மலர்கள், ஒவ்வொன்றும் வடிவம், நிறம், அழகு ஆகியவற்றில் வேறுபட்டு காணப்படுகின்றன. இவை மிதமான காலநிலை உள்ள பகுதிகளில் வளர்கின்றன. நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் வனப்பகுதிகளில் ஏராளமான ஆர்கிட் மலர்கள் காணப்படுகின்றன.'எரிடிஸ் கிரிஸ்பம்' என்ற தாவரவியல் பெயருடைய ஆர்கிட் மலர்கள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பூத்து, இரண்டு வாரங்களுக்கு மேல் வாடாமல் இருக்கின்றன. மலரின் அமைப்பு நரிவால் போன்று இருப்பதால், நரிவால் 'ஆர்கிட்' என அழைக்கின்றனர்.'ஈட்டி மரங்களில் பெருமளவில் ஒட்டுண்ணியாக வாழும் இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை. வேரில் உள்ள 'வாஸ்குலார்' திசு வாயிலாக காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வாழ்கின்றன. சீசன் காலத்தில் இந்த மலரை தேனீக்கள் அதிகளவில் வட்டமிடும்' என, தாவர ஆய்வா ளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கூடலூரில் வனப் பகுதிகளில் மட்டுமின்றி, சாலையோர மரங்களிலும் இவ்வகை ஆர்கிட் மலர்கள் அழகாக காட்சியளிக்கின்றன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us