/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தி.மு.க.,வினர் 195 பேர் சிறையில் அடைப்புதி.மு.க.,வினர் 195 பேர் சிறையில் அடைப்பு
தி.மு.க.,வினர் 195 பேர் சிறையில் அடைப்பு
தி.மு.க.,வினர் 195 பேர் சிறையில் அடைப்பு
தி.மு.க.,வினர் 195 பேர் சிறையில் அடைப்பு
ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
விழுப்புரம் : விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் முன் போராட்டம் நடத்த முயன்ற தி.மு.க., வினர் 195 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத் தில் கைதான 152 பேர் மீதும் அரசக்கு எதிராக சதித்திட் டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போல் கடலூர் மாவட்டத்தில் கைதான தி.மு.க.,வினர் 43 பேர் மீதும் 151 (அனுமதியின்றி திரண்டு அரசுக்கு எதிராக கோஷமிடுதல்) 7(1) (ஏ) சி.எல்.ஏ., (அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல்) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.