Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பா.ஜ., - கொ.மு.க., வேட்பு மனு வாபஸ்: சுயே., பெண் வேட்பாளருக்கு திடீர் ஆதரவு

பா.ஜ., - கொ.மு.க., வேட்பு மனு வாபஸ்: சுயே., பெண் வேட்பாளருக்கு திடீர் ஆதரவு

பா.ஜ., - கொ.மு.க., வேட்பு மனு வாபஸ்: சுயே., பெண் வேட்பாளருக்கு திடீர் ஆதரவு

பா.ஜ., - கொ.மு.க., வேட்பு மனு வாபஸ்: சுயே., பெண் வேட்பாளருக்கு திடீர் ஆதரவு

ADDED : அக் 04, 2011 12:35 AM


Google News
ஈரோடு: ''என்னை கட்சி வேட்பாளராக பாராமல், மக்களின் வேட்பாளராக பாருங்கள்.'' என்று பா.ஜ., - கொ.மு.க., கட்சிகளின் ஆதரவு பெற்ற, சுயேட்சை வேட்பாளர் சங்கமித்திரை கூறினார்.

ஈரோட்டில் மேயர் பதவிக்கு, பா.ஜ., - கொ.மு.க., சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்த ஜெகநாதன், நேற்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இவ்விரு கட்சிகளும், சுயேட்சை வேட்பாளரான சங்கமித்திரைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தன. மனுவை வாபஸ் பெற்ற கொ.மு.க., மாநகர தலைவர் ஜெகநாதன் கூறுகையில், ''எந்த கட்சிக்கும் பயந்தோ, லஞ்சம் பெற்றுக் கொண்டோ, எனது மனுவை வாபஸ் பெறவில்லை. வேட்பாளர் சங்கமித்திரையின் கருத்துக்களும், வாக்குறுதியும், பா.ஜ., - கொமு.க.,வின் கருத்தோடு ஒத்துப்போகிறது. எனவே, அவருக்கு ஆதரவு தெரிவித்து, பா.ஜ., - கொ.மு.க.,வினர் பிரச்சாரத்தில் ஈடுபடுவர்,'' என்றார். வேட்பாளர் சங்கமித்திரை கூறுகையில், ''ஈரோட்டில் மேயராக தேர்வான யாருமே, ஈரோடு மக்களுக்காக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதாலும், பா.ஜ., - கொ.மு.க., ஆதரவாலும், மேயர் தேர்தலில் நான் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. என்னை கட்சி வேட்பாளராகவும், ஜாதி அடிப்படையிலும் பாராமல், மக்களின் வேட்பாளராக பாருங்கள். சீரான குடிநீர், விளையாட்டு துறை மேம்பாடு, சாலை வசதி மேம்படுத்த, நாங்கள் போராடுவோம். ஈரோட்டை பசுமை நகரமாக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்போம். பணத்தை வாங்கி கொண்டு மக்கள் வாக்களிப்பர் என்று சிலர் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ஜனநாயகத்துக்கு மரியாதை கொடுத்து, ஈரோடு மக்கள் நேர்மையான முறையில் வாக்களிப்பர்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us