/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருவானைக்கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம்திருவானைக்கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம்
திருவானைக்கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம்
திருவானைக்கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம்
திருவானைக்கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம்
ADDED : ஆக 06, 2011 02:25 AM
ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவில் ஆடிப்பூர தெப்ப உற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
திருவானைக்கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 24ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. ஒன்பதாம் நாள் விழாவான கடந்த முதல் தேதி அம்மன் வெள்ளி மஞ்சத்திலும், இரண்டாம் தேதி பல்லக்கிலும் வீதி உலா வந்தது. முக்கிய விழாவான ஆடிப்பூர தெப்பம் கடந்த வியாழக்கிழமையன்று நடந்தது. மாலை ஆறு மணிக்கு ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் விசேஷ பூஜைகள் நடந்தது. இதன் பிறகு உபயதாரர்கள் மரியாதை நடந்தது. தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆடி பூர தெப்பக்குளத்தில் ஸ்வாமியும், அம்மனும் எழுந்தருளினர். தெப்பம் தெப்பகுளத்தை ஐந்துமுறை வலம் வந்தது. இதைக்காண தெப்பக்குளத்தை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஸ்வாமியும், அம்மனும் தெப்பக்குளத்தை வலம் வந்த பிறகு பக்தர்கள் புடை சூழ தெற்கு ரதவீதி, வடக்கு ரத வீதிகளில் பல்லக்கில் வீதி உலா வந்தனர். ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் ஆனந்த் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.