/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் ரயில்வே கோட்டத்தில் அதிரடி ரயில் தகர்ப்பு சதியை முறியடிக்க புது திட்டம்சேலம் ரயில்வே கோட்டத்தில் அதிரடி ரயில் தகர்ப்பு சதியை முறியடிக்க புது திட்டம்
சேலம் ரயில்வே கோட்டத்தில் அதிரடி ரயில் தகர்ப்பு சதியை முறியடிக்க புது திட்டம்
சேலம் ரயில்வே கோட்டத்தில் அதிரடி ரயில் தகர்ப்பு சதியை முறியடிக்க புது திட்டம்
சேலம் ரயில்வே கோட்டத்தில் அதிரடி ரயில் தகர்ப்பு சதியை முறியடிக்க புது திட்டம்
ADDED : ஆக 16, 2011 04:09 AM
சேலம்: சமூக வரோதிகள் ரயில்வே தண்டவாளங்களை தகர்க்கும் சதி திட்டத்தை முறியடிக்கும் விதமாக, 5 கி.மீ., ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்த, சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், ரயில்வே நிலைக்குழு மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் சங்கரப்பா தலைமை வகித்தார். ரயில்வே கோட்ட மேலாளர் ராம், உதவி கோட்ட மேலாளர் களியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேலம் ரயில்வே கோட்டத்தை கடந்து செல்லும் ரயில்களில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும். ரயில்களில் திருட்டு, செயின் பறிப்பு, பிக்பாக்கெட், சூட்கேஸ் களவு உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்க, பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். ரயில்களில் பயணம் செய்யும் பணிகளுடன் கலந்துள்ள திருட்டு, கொள்ளை கும்பலை இனம் கண்டு பிடிக்க ரயில்வே போலீஸாருக்கு, ரயில்வே அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.ரயில்களில் சந்தேகத்துக்கு இடமாக பயணம் செய்பவர்கள் மற்றும் 'டிக்கெட்' இல்லாமல் பயணம் செய்பவர்கள் குறித்து, டி.டி.இ.ஆர்.,கள் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ரயில்வே தண்டவாளங்களில் பாறாங்கற்கள் மற்றும் வெடி பொருட்களை வைத்து தகர்க்கும் சமூக விரோதிகளின் சதித் திட்டத்தை முறியடிக்கும் விமதாக, தண்டவாளப்பாதையில் 5 கி.மீ., தூரத்துக்கு ஒரு கண்காணிப்பு கேமரா வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆள் இல்லாத 'ரயில்வே கேட்'களில் நடக்கும் விபத்துகளை தடுக்கும் விதமாக, பாதையை கடந்த செல்லும் வரை, ரயில் இன்ஜின் டிரைவர்கள் 'ஹாரன்' மூலம் எச்சரிக்கை செய்ய வேண்டும். ரயில்வே பிளாட்ஃபாரங்களில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். ரயில்களில் நடக்கும் திருட்டு சம்பவங்கள் குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, காங்கேயம் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., ராஜவேலு, சேலம் ரயில்வே குற்றப்புலனாய்வு பிரிவு சங்கரப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


