/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எல்.பி.எப்., சங்க செயற்குழு கூட்டம்எல்.பி.எப்., சங்க செயற்குழு கூட்டம்
எல்.பி.எப்., சங்க செயற்குழு கூட்டம்
எல்.பி.எப்., சங்க செயற்குழு கூட்டம்
எல்.பி.எப்., சங்க செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 14, 2011 10:31 PM
திருப்பூர் : பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்.,) செயற்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது.
தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். பொது செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 'பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம், 2010ல் முடிவடைந்தது; கடந்த ஏப்., 28ம் தேதி, அனைத்து சங்கங்களின் கூட்டத்தில் புதிய உயர்வு கோரிக்கையை ஒருமுகப்படுத்தி, பனியன் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டது; சம்பள உயர்வு குறித்த பேச்சு இதுவரை நடக்கவில்லை. காலம் தாழ்த்தி வரும் பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள், உடனடியாக பேச்சு நடத்தி, புதிய சம்பள உயர்வை வழங்க முன்வர வேண்டும்,' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொருளாளர் பூபதி, துணை செயலாளர் தங்கராஜ் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.