17 நாள் குழந்தை வயிற்றில் கட்டி அகற்றம்:பொள்ளாச்சி அரசு டாக்டர்கள் சாதனை
17 நாள் குழந்தை வயிற்றில் கட்டி அகற்றம்:பொள்ளாச்சி அரசு டாக்டர்கள் சாதனை
17 நாள் குழந்தை வயிற்றில் கட்டி அகற்றம்:பொள்ளாச்சி அரசு டாக்டர்கள் சாதனை
பொள்ளாச்சி:பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த கட்டி அகற்றப்பட்டது.பொள்ளாச்சி ரெட்டியார்மடம் கோடங்கிபட்டியை சேர்ந்தவர் செல்வா, 25; இவரது மனைவி கவுரி, 21.சமீபத்தில்,பெத்தநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:இங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் அதன் வயிற்றில் கட்டி இருந்தது தெரிய வந்தது. பிறந்து 17 நாட்களே ஆகியிருந்தன. எனினும், குழந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்து, கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது.நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 250 கிராம் எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது. இது பரிசோதனைக்கு அனுப்பப்படும். இந்த கட்டியை அலட்சியமாக விட்டிருந்தால், குழந்தையின் உயிருக்கே ஆபத்து நேர்ந்திருக்கும். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இது போன்ற சிகிச்சைகள் செய்வது இதுவே முதல் முறை. குழந்தை தற்போது நலமாக இருக்கிறது.இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் கண்ணன், வைத்தியலிங்கம் அறுவை சிகிச்சை செய்தனர்.