/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கார், பைக் மோதி விபத்து லாரி உரிமையாளர் பலிகார், பைக் மோதி விபத்து லாரி உரிமையாளர் பலி
கார், பைக் மோதி விபத்து லாரி உரிமையாளர் பலி
கார், பைக் மோதி விபத்து லாரி உரிமையாளர் பலி
கார், பைக் மோதி விபத்து லாரி உரிமையாளர் பலி
ADDED : ஆக 01, 2011 02:28 AM
எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே கார், பைக் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற லாரி உரிமையாளர் பலியானார்.
பைக்கில் சென்ற மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ராமசாமி மகன் ராமராஜ்(25). அதே ஊரை சேர்ந்த தங்கசாமி மகன் அசோக்குமார்(28) இரண்டு பேரும் தாப்பாத்தியிலிருந்து ஒரு பைக்கில் எட்டயபுரம் அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தாப்பாத்தி பஸ்ஸ்டாப் அருகே செல்லும் போது இவர்கள் பைக்கும் தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கி செல்லும் காரும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பைக்கில் சென்ற லாரி உரிமையாளர் ராமராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இந்நிலையில் படுகாயம் அடைந்த கூலி தொழிலாளி அசோக்குமாருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளை.ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எப்போதும் வென்றான் இன்ஸ்பெக்டர்(மாசார்பட்டி பொறுப்பு) வீரபாண்டி ராமராஜ் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கார்டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.