முந்திக் கொண்ட தே.மு.தி.க., : பின் தங்கியது காங்கிரஸ்
முந்திக் கொண்ட தே.மு.தி.க., : பின் தங்கியது காங்கிரஸ்
முந்திக் கொண்ட தே.மு.தி.க., : பின் தங்கியது காங்கிரஸ்
ADDED : செப் 27, 2011 11:45 PM
திண்டுக்கல்: உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல் முழுவதையும் வெளியிட்டு, தே.மு.தி.க., மற்ற கட்சிகளை முந்திக் கொண்டது.
உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளர்களையும், தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி தலைவர் வேட்பாளர்களையும் அ.தி.மு.க., அறிவித்தது. சற்று தாமதமாக மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர் பட்டியல் வெளியிடப்படவில்லை. தி.மு.க., சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதும், பேரூராட்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. காங்., கட்சி நேற்று மாலை வரை, எந்த பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க வில்லை. உள்ளாட்சி பதவிகளுக்கான அனைத்து பட்டியலையும் வெளியிட்டு, முதலிடத்தை தே.மு.தி.க., தட்டிச் சென்றது. காங்., கட்சி இன்னும் இழுபறியில் தான் உள்ளது.