மாணவர்களை நெறிப்படுத்தும் நிகழ்ச்சி
மாணவர்களை நெறிப்படுத்தும் நிகழ்ச்சி
மாணவர்களை நெறிப்படுத்தும் நிகழ்ச்சி
ADDED : ஆக 29, 2011 12:37 AM
நாகமலைபுதுக்கோட்டை : வடபழஞ்சி செந்தாமரை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களை நெறிப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் செந்தூர்பாண்டி வரவேற்றார். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை பேராசிரியர் கணேஷ்பாபு அறிமுக உரையாற்றினார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இயக்குனர் ராஜாகோவிந்தசாமி பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் எதிர்கால தேவை அறிந்து கற்க வேண்டும். மூன்று ஆண்டுகளில் தங்களை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களின் பயணம் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும். வெற்றி பெற்ற பின்னர் அதனை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்'' என்றார். மாணவி சத்தியா நன்றி கூறினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் அஜித் தொகுத்து வழங்கினார்.