/உள்ளூர் செய்திகள்/சென்னை/புறநகர் பகுதியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை : கால்வாய்கள் தூர்வாரும் பணி ஜரூர்புறநகர் பகுதியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை : கால்வாய்கள் தூர்வாரும் பணி ஜரூர்
புறநகர் பகுதியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை : கால்வாய்கள் தூர்வாரும் பணி ஜரூர்
புறநகர் பகுதியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை : கால்வாய்கள் தூர்வாரும் பணி ஜரூர்
புறநகர் பகுதியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை : கால்வாய்கள் தூர்வாரும் பணி ஜரூர்
பருவமழைக்கு முன், சென்னை புறநகர்ப் பகுதியில் வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, 20 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணி துவங்கியது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக 6,900 மீட்டர் நீளத்திற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் தலைமையில், போரூர் ஏரியிலிருந்து அடையாறுக்கு செல்லும் மணப்பாக்கம் கால்வாய் தூர்வாரும் பணி துவங்கியது. பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தூர்வாரும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதேபோல, அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பட்டூர், கொளத்துவாஞ்சேரி, பரணிபுத்தூர், மவுலிவாக்கம், பெரியபணச்சேரி, கெருகம்பாக்கம், கரையாம்பாக்கம், மதனந்தபுரம், மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், தரைப்பாக்கம் ஆகிய கிராமங்களில் மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் தூர்ந்துபோய் உள்ளது.
கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கால்வாய்கள் சீரமைக்கும் பணி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தலைமையில் நடந்து வருகிறது. இதன் மூலம் மழைக் காலத்தில், மழைநீர் வெளியேற வழி ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர், 'ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன் போரூர் ஏரியிலிருந்து, அடையாறு ஆற்றுக்கு செல்லும் மணப்பாக்கம் கால்வாய் மற்றும் பல கிராமங்களில் மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருவது வழக்கம். இந்த ஆண்டு, இந்த இரு பணிகளுக்கும், மொத்தம் 20 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் பணிகள் நிறைவடையலாம்,' என்றார்.
- ஜி.எத்திராஜுலு -