/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உள்ளாட்சி தேர்தல் காங்., ஆலோசனை கூட்டம்உள்ளாட்சி தேர்தல் காங்., ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் காங்., ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் காங்., ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் காங்., ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 01, 2011 02:31 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்., சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை ஊழியர் கூட்டம் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை நடக்கிறது.வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்., கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகள், செயல்வீரர்கள், கருத்துக்களை தெரிந்து கொள்ள இன்று முதல் 16ம் தேதி வரை வட்டார அளவிலான ஊழியர் கூட்டம் நடக்கிறது.
இன்று உடன்குடியிலும், நாளை ஸ்ரீவைகுண்டத்திலும், 3ம் தேதி திருச்செந்தூரிலும், 4ம் தேதி சாத்தான்குளத்திலும், 8ம் தேதி தூத்துக்குடியிலும், 14ம் தேதி புதுக்கோட்டை மற்றும் நாசரேத்திலும், 16ம் தேதி செய்துங்கநல்லூரிலும் கூட்டம் நடக்கிறது.கூட்டங்களில் மாவட்ட காங்., தலைவர் ஜஸ்டின் அகில இந்திய காங்., உறுப்பினர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏ.,க்கள் ராணி வெங்கடேசன், சுடலையாண்டி. மாவட்ட இளைஞர் காங்., தலைவர் பெருமாள்சாமி, தமிழக காங்., பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயசீலன் மற்றும் துணை அமைப்பு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.