/உள்ளூர் செய்திகள்/மதுரை/குழந்தைக்கு எத்தனை முறைதாய்ப்பால் கொடுக்க வேண்டும்குழந்தைக்கு எத்தனை முறைதாய்ப்பால் கொடுக்க வேண்டும்
குழந்தைக்கு எத்தனை முறைதாய்ப்பால் கொடுக்க வேண்டும்
குழந்தைக்கு எத்தனை முறைதாய்ப்பால் கொடுக்க வேண்டும்
குழந்தைக்கு எத்தனை முறைதாய்ப்பால் கொடுக்க வேண்டும்
ADDED : ஆக 01, 2011 02:07 AM
மதுரை:''குழந்தைக்கு தினமும் 8 முதல் 10 முறை தாய்ப்பால் கொடுக்க
வேண்டும்,'' என, மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் நடந்த உலக தாய்ப்பால்
விழிப்புணர்வு விழாவில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு டாக்டர் கண்ணன்
பேசினார்.அவர் பேசியதாவது :தாயின் உடலில் குழந்தைகளுக்காக இறைவனால்
உருவாக்கப்பட்ட ஒரு அற்புத உணவுதான் தாய்ப்பால்.
இதில் குழந்தைகளுக்கு
தேவையான புரதம், நீர்ச்சத்து, போதிய தாதுப்பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தி
பொருட்கள் உள்ளன. குழந்தை பிறந்தவுடன் முதல் மூன்று நாட்கள் வரை தாய்
மார்பில் சுரக்கும் சீம்பால், அளவில் குறைந்தாலும் சத்து நிறைந்தது.
குழந்தை பிறந்தவுடன் தினமும் 8 முதல் 10 முறை கொடுக்க வேண்டும். இரண்டு
மாதத்திற்கு பின், குழந்தை பாலுக்காக அழும்போது கொடுத்தால் போதும்.
போதியளவில் குடித்துள்ளதா? என்பதை கண்டறிவதற்கு வழிகள் உள்ளன.
குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் குழந்தைகள் குடிக்க வேண்டும். தினமும் 6 முறை
சிறுநீர் கழிக்க வேண்டும். தினமும் குழந்தையின் எடை 30 கிராம் அதிகரிக்க
வேண்டும். தாய்ப்பாலால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, மார்புச்சளி
குறையும். முதல் ஆறு மாதத்திற்கு மட்டும் தாய்ப்பால் போதும். அடுத்த இரண்டு
ஆண்டுகளுக்கு மாற்று உணவுடன் தாய்ப்பால் கொடுத்தால் போதும். தாய்ப்பால்
கொடுக்காத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது, என்றார்.