காட்டு யானைகள் அட்டகாசம் ரூ. பல லட்சம் வாழை சேதம்
காட்டு யானைகள் அட்டகாசம் ரூ. பல லட்சம் வாழை சேதம்
காட்டு யானைகள் அட்டகாசம் ரூ. பல லட்சம் வாழை சேதம்
ADDED : ஆக 24, 2011 12:49 AM

கூடலூர் : வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து வாழை, தென்னங் கன்றுகளை சேதப்படுத்தின.
தேனி மாவட்டம், லோயர்கேம்ப் வெட்டுக்காடு சங்கலிகருப்பு மேடு பகுதியில் தனியார் சிலர் வாழை, தென்னை விவசாயம் செய்து வருகின்றனர்.நேற்று அதிகாலையில் தோட்டத்தைச் சுற்றி அமைத்த வேலிகளை உடைத்து, புகுந்த யானை கூட்டம் ரூ.பல லட்சம் மதிப்புள்ள வாழை மரங்களையும், தென்னங்கன்றுகளையும் சேதப்படுத்தின. இங்கிருந்த அகழி, மழையால் சேதமடைந்ததால் யானைகள் மீண்டும் வரத்துவங்கியுள்ளன. சோலார்வேலி அமைக்க வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கை.