/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாணவர்கள் வருகை இல்லாத பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே உண்டுமாணவர்கள் வருகை இல்லாத பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே உண்டு
மாணவர்கள் வருகை இல்லாத பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே உண்டு
மாணவர்கள் வருகை இல்லாத பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே உண்டு
மாணவர்கள் வருகை இல்லாத பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே உண்டு
ADDED : செப் 19, 2011 10:45 PM
சிவகங்கை : மாணவர்கள் இன்றி, தலைமை ஆசிரியரை மட்டுமே கொண்டு சிவகங்கையில் நகராட்சி முஸ்லிம் துவக்கப்பள்ளி செயல்படுகிறது.சிவகங்கை தினசரி சந்தை அருகே பேட்டை தெருவில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி முஸ்லிம் துவக்கப்பள்ளி துவக்கப்பட்டது.
இங்கு, ஆரம்பத்தில் தலைமை ஆசிரியரின் கீழ் இரண்டு ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் பணியாற்றினர். நேருபஜார், பேட்டை தெரு உள்ளிட்ட தெருக்களை சேர்ந்த 50 மாணவர்கள் படித்து வந்தனர்.நவீன கட்டடத்தில் பள்ளி செயல்பட்டாலும், மாணவர்கள் வரத்து இன்றி போனது. கடந்த கல்வி ஆண்டு வரை 15 மாணவர்கள் மட்டுமே இப்பள்ளிக்கு வருகை தந்தனர். தலைமை ஆசிரியர் மட்டுமே வந்து சென்றார். நாளுக்கு நாள் மாணவர்கள் வருகை குறைந்ததால், இங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் சிலர் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.இக்கல்வி ஆண்டில் ஒரு மாணவர் கூட இப்பள்ளியில் சேரவும் இல்லை. பழைய மாணவர்கள் கூட மாற்றுப்பள்ளிக்கு சென்றுவிட்டனர். இக்கல்வி ஆண்டு துவங்கி 4 மாதங்களாக தலைமை ஆசிரியர், சத்துணவு உதவியாளர் மட்டுமே பள்ளிக்கு தினமும் வந்து செல்கின்றனர். மாணவர்கள் இன்றி, இப்பள்ளி செயல்பாடின்றி முடங்கியுள்ளது.இது குறித்து நேரு பஜார் சேக் கூறுகையில்: ஆரம்பத்தில் இங்கு மாணவர்கள் வருகை அதிகளவில் இருந்தது. புதிதாக தனியார் பள்ளி ஒன்று துவக்கப்பட்டது. அப்பள்ளிக்கு அனைத்து மாணவர்களும் சென்றுவிட்டனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை, நகராட்சி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.நகராட்சி 25வது வார்டு கவுன்சிலர் ராஜபாண்டி (தி.மு.க.,) கூறியதாவது: நகராட்சி சார்பில் பல லட்சம் வரை செலவு செய்து, பயனற்று கிடந்த பள்ளி கட்டடத்தை புதுப்பித்து தந்தோம். ஆனால், மாணவர்கள் வருகை இன்றி, இங்கு பணியாற்றிய ஆசிரியர்களும், மாற்று பள்ளிகளுக்கு மாறுதலாகி சென்றுவிட்டனர். கல்வித்துறை நிர்வாகம் இப்பள்ளியை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.


