Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளிகளுக்கான ஹாக்கியில் கிக்கானி, தேவாங்கர் வெற்றி

பள்ளிகளுக்கான ஹாக்கியில் கிக்கானி, தேவாங்கர் வெற்றி

பள்ளிகளுக்கான ஹாக்கியில் கிக்கானி, தேவாங்கர் வெற்றி

பள்ளிகளுக்கான ஹாக்கியில் கிக்கானி, தேவாங்கர் வெற்றி

ADDED : ஜூலை 26, 2011 09:25 PM


Google News

கோவை : குறுமைய பள்ளி மாணவருக்கான ஹாக்கிப் போட்டியில், கிக்கானி மேல்நிலை பள்ளியும், தேவாங்கர் மேல்நிலை பள்ளியும் வெற்றி பெற்றன.கோவை கல்வி மாவட்ட அளவில் மாணவ, மாணவியர் தலா எட்டு குறுமையங்களாக பிரிக்கப்பட்டு அனைத்து வகையான விளையாட்டுப்போட்டிகளும் அந்தந்த மையங்களில் நேற்று துவங்கின.

குறிப்பாக ஒக்கிலிக்கர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி சார்பில் 'ஏ' குறுமைய மாணவருக்கான ஹாக்கிப் போட்டி பாரதியார் பல்கலையில் நேற்று துவங்கியது. இதில் 14 வயது ஜூனியர், 17 வயது சீனியர், 19 வயது சூப்பர் சீனியர் பிரிவுகளில் பங்கேற்றனர்.17 வயது சீனியர் பிரிவு ஹாக்கி அரை இறுதிப் போட்டியில் தேவாங்கர் மேல்நிலை பள்ளி 3-0 என்ற கோல் கணக்கில் டி.ஏ.,ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியை வென்றது. 19 வயது சூப்பர் சீனியர் பிரிவில் கிக்கானி மேல்நிலை பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல்நிலை பள்ளியையும், மற்றொரு அரை இறுதிப் போட்டியில் தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் சபர்பன் மேல்நிலைப் பள்ளியையும் வென்றன.இன்று அனைத்து பிரிவுகளுக்கும் இறுதிப் போட்டிகள் நடக்கின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us