/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மழை நீர் சேகரிப்பு பணி: பள்ளிக்கு நிதியுதவிமழை நீர் சேகரிப்பு பணி: பள்ளிக்கு நிதியுதவி
மழை நீர் சேகரிப்பு பணி: பள்ளிக்கு நிதியுதவி
மழை நீர் சேகரிப்பு பணி: பள்ளிக்கு நிதியுதவி
மழை நீர் சேகரிப்பு பணி: பள்ளிக்கு நிதியுதவி
ADDED : ஜூலை 26, 2011 10:41 PM
கடலூர் : ஸ்ரீமுஷ்ணம் டி.வி.சி., மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்காக தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை சார்பில் 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பாண்டியன், ஆசிரியர் கீதா முன்னிலை வகித்தனர். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலடன் வரவேற்றார். விருத்தாசலம் கல்வி மாவட்ட சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். பின்னர் பள்ளியில் மழை நீர் சேகரிப்பு பணிக்காக 5,000 ரூபாய் நிதி உதவியை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். ஆசிரியர் கருணாநிதி நன்றி கூறினார்.