பிரேசிலில் பனிப்பொழிவு காபி விலை உயரும்
பிரேசிலில் பனிப்பொழிவு காபி விலை உயரும்
பிரேசிலில் பனிப்பொழிவு காபி விலை உயரும்
ADDED : ஆக 24, 2011 12:28 AM
தாண்டிக்குடி : பிரேசிலில் பனிப்பொழிவு அதிகரித்து உற்பத்தி பாதித்ததால், உலக சந்தையில், காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் காபி விவசாயிகள் கருத்தரங்கு நடந்தது. கோவை காபி வாரிய துணை இயக்குனர் ராமநாராயணா பேசியதாவது: காபி உற்பத்தியை அதிகரிக்க பல திட்டங்களை, வாரியம் செயல்படுத்தி உள்ளது. காபி மறுநடவு, இயந்திரமயத்திற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. புதிய ரகங்கள் குறித்த விழிப்புணர்வு, சந்தைப்படுத்துதல், தர மேலாண்மை, உயர்ரக உற்பத்திக்கு வாரியம் உதவுகிறது. பிரேசிலில் பனிப்பொழிவால், 60 ஆயிரம் டன் காபி உற்பத்தி பாதித்துள்ளது. இதனால் உலகளவில் விலை உயரும். கடந்த ஆண்டு கிலோ 180 ரூபாய்க்கு விற்றது; நடப்பு ஆண்டில் 200 ரூபாய் வரை உயரும். இந்திய காபிக்கு கூடுதல் விலை கிடைக்கும், என்றார்.