Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/திறப்பு விழாவிற்காக ஏங்கும் தென்காசி நகராட்சி அலுவலக கட்டடம்

திறப்பு விழாவிற்காக ஏங்கும் தென்காசி நகராட்சி அலுவலக கட்டடம்

திறப்பு விழாவிற்காக ஏங்கும் தென்காசி நகராட்சி அலுவலக கட்டடம்

திறப்பு விழாவிற்காக ஏங்கும் தென்காசி நகராட்சி அலுவலக கட்டடம்

ADDED : செப் 17, 2011 02:50 AM


Google News

தென்காசி : 'தென்காசியில் 48 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நகராட்சி அலுவலக கட்டடத்தை விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்காசி நகராட்சி அலுவலக வளாகத்தில் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.

மேலும் அதிகளவில் மழை பெய்யும் போது மழைநீர் அலுவலக கட்டடத்திற்குள் புகுந்து விடுவதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. பழைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அரசும் ஏற்றுக் கொண்டு நகராட்சி அலுவலக கட்டடம் கட்ட அரசு 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இத்தொகை கட்டட பணிக்கு போதிய அளவு இல்லாததால் நகராட்சி பொது நிதியில் இருந்து மேலும் 18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.நகராட்சி அலுவலக கட்டட பணி விரைந்து முடிக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர், இன்ஜினியர், சர்வேயர் உள்ளிட்டோருக்கு தனி அறை, கம்ப்யூட்டர் அறை, அலுவலக ஊழியர்கள் பணியாற்றும் அறை என தனி தனி அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது மிக சிறிய அளவிலான அறைகளில் நகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய கட்டடம் தயார் நிலையில் இருந்தும் திறப்பு விழா நடக்காததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல் பணி துவங்கி விட்டால் நகராட்சி அலுவலக பணி மேலும் அதிகரிக்கும். இதற்கான இட வசதி தற்போதைய கட்டத்தில் இல்லை. அதற்கு முன்னர் நகராட்சி புதிய கட்டடம் திறப்பு விழா கண்டு அக்கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.நகராட்சி புதிய கட்டடத்தை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார், எம்.பி.,லிங்கம், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us