Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/முன்னாள் படைவீரர்கள் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேற்றப்படும் :கலெக்டர்

முன்னாள் படைவீரர்கள் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேற்றப்படும் :கலெக்டர்

முன்னாள் படைவீரர்கள் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேற்றப்படும் :கலெக்டர்

முன்னாள் படைவீரர்கள் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேற்றப்படும் :கலெக்டர்

ADDED : ஜூலை 24, 2011 01:20 AM


Google News

தூத்துக்குடி : முன்னாள் படைவீரர்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.45 முன்னாள் படைவீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பாங்க் சம்பந்தமான கோரிக்கைகள், பட்டா மாறுதல், நில ஒதுக்கீடு, வேலை வாய்ப்புகள், ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கை சம்பந்தமாக மொத்தம் 33 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் செல்வராஜ் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அந்த மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.முன்னாள் படைவீரர்கள் அளிக்க கூடிய மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களிடம் கலெக்டர் செல்வராஜ் உறுதியளித்தார்.முன்னாள் படைவீரர்நல உதவி இயக்குநர் கதீஜாபேகம், முப்படை வாரிய உப தலைவர் ஜெயபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us