ADDED : ஆக 11, 2011 11:08 PM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண்ணை கடத்திய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூரை சேர்ந்த பவுல்ராஜ் மகள் பிரான்சிஸ்கா,18. இவர் சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாமாண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் ரோசாரியோவின் மனைவி எஸ்தர், பூசப்பாடியைச் சேர்ந்த தனது தம்பி மகிக்கு பிரான்சிஸ்காவை பெண் கேட்டுள்ளார். அதற்கு பிரான்சிஸ்காவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரான்சிஸ்காவிற்கும், விழுப்புரத்தைச் சேர்ந்த பாபுவிற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் தந்தை வீட்டிலேயே தங்கி கல்லூரி படிப்பை தொடர்ந்தார்.
பிரான்சிஸ்காவின் மொபைல் போனிற்கு, மகி அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்ததால் தகராறு ஏற்பட்டுள் ளது. ஊர் முக்கியஸ்தர்கள் இரு தரப்பினரையம் சமாதானம் செய்து வைத்தனர். கடந்த 2ம் தேதி கல்லூரிக்கு சென்ற பிரான்சிஸ்கா வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பவுல்ராஜின் மொபைல் போனில் மகி தொடர்பு கொண்டு ஆபாசமாக திட்டி பிரான்சிஸ்காவை கடத்தி வைத் திருப்பதாகவும், தன்னை தேடி வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து ரோசாரியோ, எஸ்தர், மகி ஆகியோரை தேடி வருகின்றனர்.