/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்
வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்
வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்
வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்
ADDED : ஆக 30, 2011 12:28 AM
பொள்ளாச்சி : உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால், ஒன்றியங்களில் ஓட்டு பெட்டிகள் சீரமைப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடக்கிறது.தமிழகத்தில், வரும் அக்., மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி, ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்கள் கீழ் கடந்தாண்டு துவங்கப்பட்டு மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை இம்மாத இறுதிக்குள்ளும், இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை வரும் செப்., 15ம் தேதிக்குள்ளும் நிறைவு செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள் ளது. இதனால், வளர்ச்சி பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் புதிய வளர்ச்சி பணிகளுக்கு 'டெண்டர்' விட முடியாது என்பதால், தேர்தல் அறிவிப்புக்கு முன் பணிகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்தல் நெருங்கி வருவதால் ஒன்றியங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஓட்டு பெட்டிகளை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஓட்டு பெட்டிகளுக்கு 'ஆலிவ் கிரீன்' நிறத்தில் வர்ணம் பூசும் பணி நடக்கிறது. பெட்டிகளுக்குள் எண்ணெயை கொட்டி சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வர்ணம் பூசப்பட்ட பெட்டிகள் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. இப்பணிகள், இன்னும் இரண்டொரு நாட்களில் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே, தயார் செய்த பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. நடப்பு தேர்தலில், ஊராட்சிகளில் இருந்த ஒரு வார்டுக்கு பல உறுப்பினர்கள் என்ற முறையை மாற்றி, ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர் என்ற முறையில் அனைத்து வார்டுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஊராட்சிகளில் கூடுதலாக வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.இதனால், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் வார்டுகள் மறுசீராய்வு செய்யப்பட்டுள்ளது. மறுசீரமைப்புக்கு ஏற்றவாறு, ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஒன்றியங்களில், இருப்பு வைக்கப்பட்டுள்ள ஓட்டு பெட்டிகளில் ஏற்கனவே 70 சதவீத பெட்டிகளுக்கு வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 சதவீத ஓட்டு பெட்டிகளுக்கு வர்ணம் பூசும் பணி தற்போது நடக்கிறது.வார்டு மறுசீரமைப்புக்கு பின் புதிய வாக்காளர் பட்டியல் தயார்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி விரைவில் நிறைவு செய்யப்பட்டு, சரிபார்க்கப்படும், என்றனர்.


